தற்சமயம் நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் தா.சே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருக்கிறது. வருகிற அக்டோபர் 10 இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இதற்கு முன்பு இயக்கிய திரைப்படம் ஜெய் பீம். அந்த திரைப்படத்தில் சமூகம் சார்ந்த கருத்தை பேசிய இயக்குனர் இந்த திரைப்படத்திலும் அப்படியான ஒரு விஷயத்தை பேசி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு தகுந்தார் போல இந்த திரைப்படமும் என்கவுண்டர் எனப்படும் போலீஸ் செய்யும் கொலைகளுக்கு எதிரான திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தின் மனசிலாயோ என்கிற ஒரு பாடல் என்ற வெளியாகி இருக்கிறது.
யுவனிடம் இருந்து காபி:
நேற்றே இந்த பாடலின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. 27 வருடங்களுக்கு பிறகு மலேசியா வாசுதேவன் இதில் பாடியிருப்பதாக கூறப்பட்டிருந்தது. மலேசியா வாசுதேவன் இறந்துவிட்டார் என்பதால் அவரது குரலை ஏ.ஐ முறையில் பயன்படுத்தி இதில் பாட வைத்திருக்கிறார் அனிரூத்.

ஆனால் பாடல் முழுவதும் மலேசியா வாசுதேவனின் குரல் வரவில்லை ஒரு சில இடங்களில் மட்டுமே வருகிறது மீத இடங்களில் அனிருத்தின் குரல் தான் வருகிறது. முழுக்க முழுக்க பாடலை அனிருத் தான் பாடி இருக்கிறார்.
மேலும் இந்த பாடலில் நிறைய காட்சிகள் அனிமேஷனில் வருவதை பார்க்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது இது விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆகி செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஏனெனில் கோட் திரைப்படத்தில் வந்த ஒரு பாடல் இப்படிதான் முழுக்க முழுக்க அனிமேஷனாக இருந்தது. அதேபோல பவதாரணியின் குரலை ஏ.ஐ முறையில் கொண்டு வந்து ஒரு பாடலை உருவாக்கி இருந்தனர். அதே முறையை பயன்படுத்தி இந்த பாடலையும் செய்திருக்கின்றனர். எனவே யுவன் சங்கர் ராஜாவை பார்த்து தான் இந்த விஷயங்களை அனிருத் செய்திருக்கிறார் என்று ஒரு பக்கம் யுவன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.








