இந்த வருடத்தின் துவக்கத்திலேயே விஜய் கடைசியாக இரண்டு திரைப்படங்கள் மட்டுமே நடிக்க போவதாக அறிவித்திருந்தார். அதனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.
அதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு நல்ல வசூலும் கிடைத்தது.
ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகி என்று பெரிதாக காட்சிகள் எதுவும் இருக்கவில்லை. அதனால் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகிக்கும் முக்கிய காட்சிகள் வைத்து திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்து விஜய் நடிக்கும் திரைப்படத்தில் முதலமைச்சராக நடிக்க இருக்கிறார்.
புது நடிகை:
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது. இந்த திரைப்படத்தில் பீஸ்ட் பட்த்தில் நடித்த பூஜா ஹெக்தே விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பூஜா ஹெக்தே நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதேபோல தமிழில் முதன் முதலில் இவர் நடித்த முகமூடி திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இதனாலேயே பூஜா ஹெக்தே நடித்தால் அந்த படம் ஓடாது என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அனேகமாக தளபதியின் 69 ஆவது திரைப்படம் இந்த பேச்சை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.