அந்த மாதிரி இயக்குனர்கள் இல்லை..? ஐட்*மாதான் பாக்குறாங்க… உண்மையை உடைத்த ஸ்ரீ ரெட்டி.
தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மூலமாக பிரபலமாகாமல் சர்ச்சை செய்திகள் மூலமாகவே அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் ஸ்ரீ ரெட்டி. நடிகை ஸ்ரீ ரெட்டி சீரியல் மற்றும் திரைப்படங்களில் கொஞ்சமாக நடித்திருக்கிறார்.
ஆனாலும் கூட இப்பொழுது பெரிதாக மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக உள்ளார். ஆனால் பிறகு நடிகர்கள் குறித்த நிறைய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்த பொழுது ஸ்ரீ ரெட்டி அதிக பிரபலம் அடைந்தார். முக்கியமாக நடிகர் விஷால் குறித்து நிறைய சர்ச்சையான தகவல்களை அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது ஸ்ரீ ரெட்டி தமிழ் சினிமா இயக்குனர்கள் குறித்து சர்ச்சையான சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எங்களைப் போன்ற நடிகைகளுக்கு நல்ல கதாபாத்திரங்கள் என்பதே இயக்குனர்கள் கொடுப்பது கிடையாது.
ஸ்ரீ ரெட்டியின் பதில்:
அவர்கள் அழைக்கும் போது ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டும் என்றுதான் அழைக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் திரைப்படங்களும் இப்போது அப்படித்தான் இருக்கிறது. குடும்பங்கள் அமர்ந்து பார்க்கும் சமுத்திரம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இப்பொழுது வருவதே கிடையாது.
இந்த இயக்குனர்களுக்கு அந்த மாதிரி கதைகளங்களை படமாக்கவும் விருப்பம் கிடையாது. ஐட்டம் பாடல்கள் வைத்து படம் எடுப்பதுதான் இவர்களது வேலையாக இருக்கிறது என்று நேரடியாக பேசியிருந்தால் ஸ்ரீ ரெட்டி. அவரது இந்த பேட்டி தற்சமயம் அதிக வைரல் ஆகி வருகிறது. இதற்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் அதுவும் ஒரு வகையில் உண்மைதான் குடும்ப திரைப்படங்கள் என்று கடைசியாக எந்த படம் வந்தது என்பது யோசனையாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.