அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கும் 5 இயக்குனர்கள்..! என்ன அந்த தோல்வி இயக்குனரும் இருக்காரா?.

Tamil Cinema News

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பலருக்குமே வாய்ப்பு கொடுத்த ஒரு நடிகராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.

சில இயக்குனர்களுக்கு முதல் திரைப்படங்களை கூட நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியசான கதைகளத்தை கொண்ட திரைப்படம் ஆகும்.இதனால் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சீரியஸான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன.

அடுத்த லைன் அப்:

ஆனால் சீரியஸான திரைப்படங்களுக்கு நடுவே தொடர்ந்து காமெடி திரைப்படங்களையும் சிவகார்த்திகேயன் விடுவதாக இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் குழந்தைகள் மத்தியில் சிவகார்த்திகேயன் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக இருக்கிறார்.

sivakarthikeyan
sivakarthikeyan

குழந்தைகளுக்கு சிவகார்த்திகேயனை அதிகமாக பிடிப்பதற்கு காரணமே அவர் காமெடி திரைப்படங்களில் நடிப்பது தான். எனவே தொடர்ந்து அதையும் அவர் செய்து கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல இப்பொழுது அவர் தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் இயக்குனர்கள் குறித்த செய்திகள் வெளி வந்திருக்கின்றன.

அதன்படி தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

காமெடி படங்கள்:

மேலும் டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல பிரிண்ஸ் திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த இயக்குனர்களில் சிபி சக்கரவர்த்தி மற்றும் அனுதீப் இருவருமே காமெடி திரைப்படங்களை இயக்கக் கூடியவர்கள் எனவே அவர் நடிக்கும் அந்த இரண்டு திரைப்படங்களும் காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனுதீப் இயக்கிய பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய நஷ்டத்தை பெரிய தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்தது.

இருந்தாலும் திரும்ப அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்