Connect with us

பிக்பாஸில் வந்த இடுப்பு பிரச்சனை… கடுப்பான ஆர்.ஜே ஆனந்தி..!

biggboss

Bigg Boss Tamil

பிக்பாஸில் வந்த இடுப்பு பிரச்சனை… கடுப்பான ஆர்.ஜே ஆனந்தி..!

Social Media Bar

Bigg Boss is one of the most popular shows on the small screen. The eighth season of Bigg Boss started off a bit more patiently than other seasons. But now the season going well on the audience

சின்னத்திரையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற சீசன்களை விடவும் எட்டாவது சீசன் கொஞ்சம் பொறுமையாக தான் துவங்கியது.

அதில் எடுத்த உடனே சுவாரசியமான விஷயங்கள் என்று நிறைய இருக்கவில்லை. ஏனெனில் எப்பொழுதுமே பிக் பாஸ் போட்டியில் நிகழ்ச்சி துவங்கிய பிறகு ஒவ்வொரு போட்டியாளருக்கும் பொறாமை, கோபம் போன்ற விஷயங்கள் ஏற்படும்.

தனியாக ஒரு பகை உருவாகும். இதனால் இவர்களுக்குள் சண்டை அதிகரித்து விடும். ஆனால் இந்த எட்டாவது சீசனில் மட்டும் பெரும்பாலும் போட்டியாளர்கள் விட்டுக் கொடுத்து விளையாடுபவர்களாக இருந்து வருகின்றனர்.

சூடுபிடிக்கும் பிக்பாஸ்:

இருந்தாலும் கூட போகப் போக பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. முக்கியமாக முதல் மூன்று வாரங்கள் பெரிதாக விளையாடாத சௌந்தர்யா தற்சமயம் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கான வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.

biggboss

biggboss

தொடர்ந்து அவர் பிக் பாஸில் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் சௌந்தர்யாவிற்கான ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர். பிக் பாஸில் ஒவ்வொரு வேலையையும் போட்டியாளர்கள் செய்வதற்கு அவர்களுக்கு தனியாக டாஸ்க் கொடுக்கப்படும்.

ஆர்.ஜே ஆனந்தியின் சண்டை:

ஆண்களின் வீட்டிற்குள் வந்து பெண்கள் சமைக்க வேண்டும் என்றாலே அதற்கு அவர்கள் டாஸ்க் செய்ய வேண்டும். அப்படியாக இன்று ஆண்கள் வீட்டிற்குள் வந்து சமைக்க வேண்டும் என்றால் சமைத்து முடிக்கும் வரை பெண்கள் இடுப்பை பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த டாஸ்கை கேட்ட ஆர்.ஜே ஆனந்தி மிகவும் கோபமடைந்துவிட்டார். மேலும் இவர் அதை செய்யவும் முடியாது என்று கூறியிருக்கிறார் இதனால் இப்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் சச்சரவுகள் துவங்கியிருக்கின்றன.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top