ஒரு தடவை மட்டும்தான்.. பத்திரிக்கையாளர் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பான நடிகை சாய் பல்லவி..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை சாய் பல்லவி. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சாய்பல்லவி மருத்துவ படிப்பை படித்துவிட்டு பிறகு சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.

சினிமாவிற்கு வந்த பிறகு சாய் பல்லவியின் நடனத்திற்கு தனி வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சினிமாவிலும் பிரபல நடிகையாக மாறினார் சாய்பல்லவி.

இந்த நிலையில் தற்சமயம் தமிழில் அமரன் திரைப்படத்தில் நடித்து அதன் மூலமாக இவர் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார். தொடர்ந்து நிறைய விருதுகளையும் வாங்கி வருகிறார். சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் திரைப்படத்திற்காக சாய் பல்லவிக்கு விருது வழங்கப்பட்டது.

அப்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த சாய் பல்லவியிடம் அது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அமரன் திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தார் சாய் பல்லவி. அப்பொழுது தொடர்ந்து அவரை நிறுத்தி இன்னொரு கேள்வி கேட்க நினைத்தனர் பத்திரிகையாளர்கள்.

உடனே கோபம் அடைந்த சாய் பல்லவி ஒரு கேள்விக்குதான் பதில் சொல்ல முடியும் .சர்வதேச திரைப்பட விழா குறித்தும் பேசிவிட்டேன் விருது குறித்தும் பேசிவிட்டேன், பிறகு என்ன என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.