தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே மாஸ் ஹிட் என்கிற நிலை தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்திற்கு பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கு அடுத்து தொடர்ந்து அரசியலில் அதிக ஆர்வம் காட்ட இருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் இத்தனை வயது ஆன பிறகும் கூட விஜய் தொடர்ந்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதனால்தான் அவரது வயது வெளியில் பெரிதாக தெரியாமல் இருக்கிறது.

மேலும் உடல் எடையும் அதிகரிக்காமல் இருந்து வருகிறது. இதற்கு நடுவே விஜய்க்கு முடி உதிர்வு இருக்கிறது என்றும் அவர் செயற்கை முடி வைத்துள்ளார் என்றும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது விஜய்க்கு சர்க்கரை பிரச்சனை இருப்பதாகவும் அதனால்தான் அவருக்கு முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.