இதுதான் நிஜமான பரிசு! –  கமல்ஹாசன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்

கோலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான கமல்ஹாசனுக்கு நேற்று பிறந்தநாள் நடந்தது. இதுவரை 200 க்கும் அதிகமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.

Social Media Bar

தற்சமயம் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூல் சாதனையை படைத்தது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை உலகம் முழுக்க இருக்கும் கமல்ஹாசன் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இதுக்குறித்து கமல்ஹாசன் பேசும்போது எனது ரசிகர்கள் ஒவ்வொருவரும் சமூக பொறுப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தேன் அதே போல அவர்கள் அதிக நற்பணிகளைச் செய்வதை பார்கக் முடிகிறது. என்றார்

கமல்ஹாசனின் 68வது பிறந்த நாளை ஒட்டி தொடர்ந்து 68 மணிநேரம் மருத்துவ முகாம் நடந்தது. அதே போல 68 பள்ளிகளுக்கு கழிப்பிடம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் புகழ்ந்து பேசி கமல்ஹாசன், தனது ரசிகர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்திருப்பது குறித்து மனமகிழ்ச்சியாக இருக்கிறது என பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.