சிம்புவும் தனுஷும் ஒரே ஸ்க்ரீனில்.. லோகேஷ் ஆயுதத்தை கையில் எடுத்த வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக அறியப்படும் இயக்குனர்களில் வெற்றி மாறன் மிக முக்கியமானவர். வெறுமனே படத்தின் வசூலுக்காக மட்டும் திரைப்படங்களை இயக்காமல் படங்களின் வழியே முக்கியமான செய்திகளை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைப்படமும் அரசியல் சார்ந்த பல விஷயங்களை பேசுவதாக இருக்கும். அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை, விடுதலை மாதிரியான ஒவ்வொரு திரைப்படமும் சமூகத்தில் நிலவும் மிக அழுத்தமான விஷயங்களை பதிவு செய்த திரைப்படங்கள் என்று கூறலாம்.

Vadachennai

Social Media Bar

இந்த நிலையில் அடுத்து நடிகர் சிம்புவை வைத்து திரைப்படம் இயக்க துவங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது வடசென்னை அடுத்த பாகத்திற்கும் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கும் இடையே தொடர்பு உண்டு என்று கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இதே மாதிரி அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் மற்றொரு திரைப்படத்திற்கு தொடர்பு வைத்து படங்களை இயக்கி வருவது அனைவரும் அடுத்த விஷயமே. தற்சமயம் வெற்றிமாறனும் அதே ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

எனவே வடசென்னை 2 திரைப்படத்தில் சிம்புவும் தனுஷும் இரட்டை கதாநாயகர்களாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.