தமிழில் பெரிய நடிகர்களை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். பெரும்பாலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வரும் படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து விடும்.
ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என்று அவர் விஜயை வைத்து இயக்கிய படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து இருக்கின்றன.

ஏ.ஆர் முருகதாஸ்க்கு இருந்த ஆசை:
நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தமிழில் ஸ்பைடர் என்கிற திரைப்படத்தை இயக்கினார் ஏ.ஆர் முருகதாஸ். அந்த படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது.
அதில் தெலுங்கு படத்தில் விஜய்யை வில்லனாகவும் தமிழ் கதையில் மகேஷ்பாபுவை வில்லனாகவும் வைத்து திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன்.
இது குறித்து விஜயிடமும் பேசியிருந்தேன். மகேஷ்பாபு அதற்கு ஒப்புக்கொண்டார் என்றால் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் ஆனால் மகேஷ்பாபு நடித்தால் மட்டுமே அந்த கதையில் நடிப்பேன் என்று கூறினார் விஜய் என்று அந்த விஷயத்தை கூறுகிறார் ஏ ஆர் முருகதாஸ்.
ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த படத்தை பிறகு எடுக்கவே இல்லை.