சமீப காலமாக நடிகர் சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் அரசன்.
அரசன் படத்திற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படம் வடசென்னை திரைப்படத்தோடு தொடர்புடைய கதைக்களத்தைக் கொண்டது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து கொண்டே இருந்தது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்சமயம் அந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. வடசென்னைக்கு முந்தைய காலகட்டமாக இந்த படம் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
அரசன் திரைப்படம்:
தனுஷ் கதாபாத்திரமும் ராஜன் கதாபாத்திரமும் வருவதற்கு முன்பு வடசென்னையில் இருந்த ஒரு கதாபாத்திரம்தான் சிம்புவின் கதாபாத்திரமாக இருக்கிறது. ஏனெனில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் நடப்பதாக இந்த படம் அமைந்து இருக்கிறது.
வெகு காலங்களாக தனுஷ் சிம்பு என்று இருந்து வந்த போட்டி இந்த படத்தில் நின்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் தனுஷ் குறித்து சிம்பு பேசுவது போன்ற வசனமும் இந்த ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கிறது. இந்த படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட கதை எனத் தெரிகிறது.
இது குறித்து ரசிகர்கள் கூறும் பொழுது பெரும்பாலும் இது வடசென்னையில் உண்மையில் வாழ்ந்த ஏதாவது ஒரு நபரின் கதையாகதான் இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.