Predator Badlands: 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் படங்களில் பிரேடட்டர் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படம் ஆகும். பூமிக்கு வரும் ஏலியன்கள் அவற்றை சமாளிக்கும் மனிதர்கள் என்பதாக தான் எப்போதும் பிரேடட்டர் திரைப்படத்தின் கதை இருக்கும்.
ஆனால் ஒரே கதை அம்சத்தில் வந்த காரணத்தினால் ஒரு கட்டத்திற்கு பிறகு பிரிடேட்டர் திரைப்படத்தை மக்கள் விரும்பவில்லை என்று தான் கூற வேண்டும்.
அதற்கு பிறகு இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் Predator: Badlands எங்கிற ஒரு புது திரைப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை பிரேடட்டர் தான் இந்த படத்தின் கதாநாயகனாக இருக்கிறது.
பிரேடட்டர் எனப்படும் ஏலியன் ஒரு கிரகத்திற்கு செல்கிறது. அந்த கிரகமே அந்த ஏலியனை அழிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் அந்த கிரகத்திலிருந்து அவர் எப்படி தப்பிக்க போகிறார் என கதை இருக்கிறது.
இதற்கு நடுவே அந்த கிரகத்தில் ஒரு மனிதரும் இருக்கிறார் இதன் ட்ரெய்லர் தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது.









