தெலுங்கில் உள்ள நடிகர்களில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. பெரும்பாலும் மகேஷ் பாபு நடிக்கும் திரைப்படங்கள் தமிழில் எப்படி விஜய்யின் படங்கள் அதிக வசூலை கொடுக்குமோ அதேபோல பெரும் வசூலை கொடுக்க கூடியது.
இந்த நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் மகேஷ்பாபுவின் அடுத்த தலைமுறை நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஈடு கொடுத்து மகேஷ்பாபுவும் நடித்து கொண்டு இருக்கிறார்.
தற்சமயம் மகேஷ்பாபுவின் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன மகேஷ் பாபுவின் அக்கா மகளான ஜான்வி ஸ்பரூக் என்கிற பெண் அடுத்து கதாநாயகியாக களம் இறங்க இருக்கிறாராம்.






