சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்தது.
இந்த திரைப்படம் குலிகா என்கிற தெய்வத்தை மையமாகக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதன் முதல் பாகமான காந்தாரா திரைப்படம் பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்த இரண்டு தெய்வங்களுமே துளுவ மக்களின் தெய்வங்களாகும். கர்நாடகாவில் அதிகமாக இருக்கும் மற்றொரு மக்கள் கூட்டம் தான் துளுவ மக்கள் கூட்டம். இவர்களின் தாய்மொழியாக துளு என்கிற மொழி இருக்கிறது.
இவர்கள் வணங்கும் நாட்டார் தெய்வம்தான் இந்த பஞ்சுருளி மற்றும் குலிகா இந்த தெய்வங்களை வணிகப்படுத்தியதன் காரணமாக இந்த மக்கள் பலரும் ரிஷப் ஷெட்டியை விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு நடுவே இதில் இன்னும் சில ரகசியங்களும் புதைந்து இருக்கின்றன இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு இப்பொழுதே இருக்கும் மொழி வாரியான எல்லை கோடுகள் எதுவும் அப்பொழுது இருக்கவில்லை.
அந்த சமயத்தில் துளுவ மக்கள் தமிழ்நாடு கேரளா கர்நாடகம் என்று மூன்று பகுதிகளிலும் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் கூட துளுவ மக்கள் இருந்து இருக்கின்றனர். எனவே துளு மக்களை கர்நாடகாவின் அடையாளமாக முதலில் கூறமுடியாது.
ஏனெனில் தமிழ்நாட்டில் மன்னராக இருந்த கிருஷ்ண தேவராயர் துளுவ மக்களை சேர்ந்தவராவார். அந்த அளவிற்கு துளுவ மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கு இடையே தொடர்பு உண்டு எனவே காந்தாரா திரைப்படத்தில் காட்டப்படும் தெய்வங்கள் ஒரு வகையில் தமிழ்நாட்டோடு தொடர்புடையது தான் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.







