தமிழில் பேய் படங்களுக்கு மட்டும் எப்பொழுதுமே பஞ்சமே இருக்காது தொடர்ந்து அந்த வகையான படங்கள் வெற்றியை கொடுத்து வருகின்றன.
அப்படியாக அதிக வெற்றியை கொடுத்து வரும் இரண்டு பேய் படங்கள் உள்ளன. அதில் ஒன்று சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை பாகங்கள் அதேபோல ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வரும் காஞ்சனா பாகங்கள்.
இந்த நிலையில் காஞ்சனா ஏற்கனவே மூன்று பாகங்கள் வந்த நிலையில் அதன் நான்காவது பாகத்தை இயக்க துவங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கின்றனர்.
முக்கிய கதாநாயகியாக பூஜா ஹெக்தேவும் இரண்டாவது கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த நோரா ஃபெத்தியும் நடித்திருக்கின்றனர். இருவருமே கவர்ச்சி காட்டுவதில் முக்கியமான நடிகைகள் என்பதால் படத்தில் அதிக கவர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் காஞ்சனா திரைப்படம் துவங்கிய உடனே அந்த படம் அதிக விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. சாட்டிலைட் உரிமைகள் மட்டுமே 110 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. காஞ்சனா நான்காம் பாகம் திரைப்படத்தின் ஹிந்தி சேட்டிலைட் உரிமம் 60 கோடிக்கும் தமிழில் 50 கோடிக்கும் விற்பனையாகி இருக்கிறது.
இதுவே படத்துக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.







