Ilayaraja: சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் யார் இந்த தேர்தலில் பெறும் வெற்றியை பெறுவார்கள் என்கிற கேள்வி பலருக்குமே இருந்து வருகிறது. முக்கியமாக விஜய் தேர்தலில் இறங்கியது தற்சமயம் நடந்த சட்டமன்ற தேர்தலின் மீது இளைஞர்கள் அதிக ஈடுபாடு காட்ட காரணமாக அமைந்துவிட்டது.
கண்டிப்பாக விஜய்க்கு பெரும் அளவில் வாக்கு சதவீதம் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. த.வெ.க கட்சி ஆட்சி அமைக்குமா? என்பது தெரியவில்லை என்றாலும் கூட விஜய்க்கு அதிக வாக்குகள் கிடைத்தாலே போதும் என்றும் பலரும் பேசி வருகின்றனர்
திரைத்துறையை பொறுத்தவரை விஜய்க்கு ஆதரவான மற்றும் எதிரான எண்ணவோட்டங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று இளையராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

ஆதரவாக வெளியான பாடல்:
அவர் தனது யூ ட்யூப் தளத்தில் முன்பு வெளியான எங்கள் நீதி படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். எங்கள் நீதி திரைப்படம் எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். இந்த படத்தில் விஜய் சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதில் வரும் சின்ன தம்பி உன்ன நம்பி காத்திருக்கு இந்த நாடு என்ற பாடலைதான் இப்போது இளையராஜா வெளியிட்டுள்ளார். இது இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது









