ரியோ ராஜின் ‘Ram And Leela’ ரிலீசுக்கு ரெடி!
காதல், காமெடி, இளமை துள்ளல் என ஒரு ஃப்ரெஷ் என்டர்டெயின்மென்ட் படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ரியோ ராஜின் Ram and Leela tamil movie முக்கியமான தேர்வாக மாறியுள்ளது. படத்திற்கு தற்போது சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதால், ரிலீஸ் உறுதியாகியுள்ளது.
Ram and Leela tamil movie – ரிலீஸ் தேதி என்ன?
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ரியோ ராஜுக்கு ஜோடியாக வர்திகா நடிக்கிறார். அவருக்கு இது தமிழ் சினிமாவில் அறிமுகப் படம் என்பதும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் பெயர் முதலில் ‘Ram In Leela’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ‘Ram And Leela’ என மாற்றப்பட்டது.
ரியோ ராஜுக்கு தொடருமா வெற்றி பயணம்?
‘Joe’ மற்றும் ‘Aan Paavam Polladhadhu’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த நிலையில், ரியோ ராஜின் அடுத்த படமாக இது வெளியாகிறது. அதனால் இந்தப் படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், ஆகாஷ் பூஜித் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

ஒளிப்பதிவை மல்லிக் அர்ஜுன் கவனிக்க, அன்கிட் மேனன் இசையமைத்துள்ளார். எடிட்டிங்கை YNC சிவா மேற்கொண்டுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் EYWA என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
காதல் கதையில் ரியோ ராஜின் புதிய முயற்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. U/A சான்றிதழுடன் வெளியாகும் Ram and Leela tamil movie, இளைஞர்கள் மத்தியில் எந்த அளவுக்கு கனெக்ட் ஆகிறது என்பதை திரையரங்க ரிசல்ட்தான் சொல்லப் போகிறது.






