எனக்கு அந்த வரி பிடிக்கலை! நடிக்க மாட்டேன் – பாலச்சந்தரிடம் வம்பு செய்த நாகேஷ்!

இயக்குனர் பாலச்சந்தரும் நாகேஷும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பல படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். பல படங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதுண்டு. ஆனாலும் இவர்கள் இருவரும் எப்போதும் நட்பாகவே இருந்து வந்துள்ளனர்.

Social Media Bar

இந்த நிலையில் பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த திரைப்படம் எதிர்நீச்சல். 1968 இல் இந்த படம் வெளியானது. மிகவும் செண்டிமெண்டலான ஒரு திரைப்படம் இந்த எதிர்நீச்சல்.

இந்த படத்தில் ஒரு உணர்வு பூர்வமான வசனத்தை எழுதி இருந்தார் பாலச்சந்தர். மிகவும் தத்துவ ரீதியான வசனம் அது. அதை நாகேஷிடம் கூறி அந்த வசனத்தை நடிக்க சொன்னார். உடனே நாகேஷ் “கதைப்படி நான் அடுத்த வேளை உணவுக்கே போராடி வரும் நிலையில் இந்த மாதிரியான தத்துவமான விஷயங்களை பேசுவது என்பது கதாபாத்திரத்திற்கு ஒத்து வருமா?” என கேட்டுள்ளார்.

அப்ப இந்த வசனம் ஒத்து வராதுன்னு சொல்றியா! சரி இன்னிக்கு ஷூட்டிங் வேண்டாம். எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்புங்க என பாலச்சந்தர் கோபமாக கூறவும் உடனே நாகேஷ் கிளம்பி சென்றுவிட்டார்.

கோபம் தனிந்த பாலசந்தர் நாகேஷை கூப்பிடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் அதற்குள் நாகேஷ் கிளம்பி சென்றுவிட்டார். மறுநாள் மீண்டும் படப்பிடிப்பிற்கு நாகேஷ் வந்துள்ளார். அவரிடம் தன்மையாக பேசிய பாலசந்தர் இந்த வசனம் படத்திற்கு முக்கியம் என எடுத்துரைத்துள்ளார்.