மறுபடியும் கம் பேக் கொடுக்கிறேன்! – நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா!

கடந்த சில மாதங்களாக உடல் நல பிரச்சனையால் வெகுவாக சிரமப்பட்டு வந்தார் நடிகை சமந்தா. மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயினால் மிகவும் அவதிப்பட்டார்.

Social Media Bar

இதனால் அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை தவறவிட்டார். முக்கியமாக தளபதி 67 இல் இவர் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் உடல் நல குறைவால் அந்த பட வாய்ப்பையும் ஒதுக்கிவிட்டார். தற்சமயம் அந்த படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.

பல நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில் தற்சமயம் உடல் நலம் குணமாகியுள்ளார் சமந்தா. மீண்டும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இதனையடுத்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். திரை பிரபலங்கள் அனைவரும் இதற்கு அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு நடுவே அமேசானில் ஒரு சீரிஸில் நடிக்க உள்ளார சமந்தா. அட்டகாசமான அந்த போஸ்டர்களும் தற்சமயம் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சமந்தாவின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்க துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.