Connect with us

மாஸ்டரை மிஞ்சிய வாத்தி கலெக்‌ஷன்! – தனுஷ் செய்த புதிய சாதனை!

Latest News

மாஸ்டரை மிஞ்சிய வாத்தி கலெக்‌ஷன்! – தனுஷ் செய்த புதிய சாதனை!

cinepettai.com cinepettai.com

தமிழ் திரையுலகில் முக்கியமான கதாநாயகர்கள் நட்சத்திரங்களில் தனுஷ்க்கும் ஒரு இடம் உண்டு. தற்சமயம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக தனுஷ் பார்க்கப்படுகிறார். அதிகப்பட்ச கதாநாயகர்கள் சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக நடிக்கும்போது தனுஷ் மட்டும் சண்டையே இல்லாத திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இறுதியாக தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் இரண்டுமே நல்ல வசூல் சாதனை செய்த திரைப்படங்களாக இருந்தன. இதனை தொடர்ந்து தற்சமயம் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் வாத்தி.

வாத்தி படம் தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் வெளியானது. இந்த படம் தமிழை விடவும் தெலுங்கு சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு சினிமாவில் பெரும் நட்சத்திரங்களின் படம் ஓடுவதை காட்டிலும் அதிகமான வசூலை பெற்றுள்ளது தனுஷ் நடித்த வாத்தி.

இதுவரை வாத்தி படத்திற்கு தெலுங்கில் இருந்து கிடைத்த பங்கு மட்டும் 12 கோடி என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மாஸ்டர் திரைப்படமும் தெலுங்கில் வெளியானது. ஆனால் இதை விட குறைவான தொகையே மாஸ்டர் திரைப்படத்திற்கு பங்காக கிடைத்தது என கூறப்படுகிறது.

எனவே அடுத்தடுத்து தெலுங்கு ரசிகர்களுக்காக தனுஷ் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

POPULAR POSTS

godzilla-minus-one
ilayaraja seenu ramasamy
viduthalai
james vasanthan vairamuthu
mgr kamarajar
12 digit masterstroke
To Top