கமர்சியல் படத்துக்கு இது போதும்!.. ஜெயிலர் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த நெல்சன்!..

Cinema History News Tamil Cinema News

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாக ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த திரைப்படம் பெறும் வெற்றியடையும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இதனால் இப்போது வரை ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு மார்க்கெட்டில் பெறும் வரவேற்பு இருந்து வருகிறது.

இதனால் இப்போது இருக்கும் இளைய நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்சமயம் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என படக்குழுவே மகிழ்ச்சி தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இதுக்குறித்து நெல்சனிடம் கேட்கப்பட்டது. அப்போது இறுதியாக படத்தை பார்க்கும்போது உங்களுக்கு படம் எப்படி இருந்தது என கேட்கப்பட்டது. அதற்கு நெல்சன் பதிலளிக்கும்போது இந்த திரைப்படத்தை பார்க்கும்போது இதை இன்னமும் நன்றாக பண்ணியிருக்கலாமோ என தோன்றியது.

ஆனால் ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்கு இது போதுமானது என நினைத்தேன். எனவே இது நன்றாக வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வெற்றியை படம் கொடுத்துள்ளது என கூறியுள்ளார் நெல்சன்.