Connect with us

ஷங்கர் போனை கூட எடுக்க மாட்டிங்கிறார்!.. அந்த தயாரிப்பாளரிடம் நன்றி மறக்கலாமா?

Latest News

ஷங்கர் போனை கூட எடுக்க மாட்டிங்கிறார்!.. அந்த தயாரிப்பாளரிடம் நன்றி மறக்கலாமா?

cinepettai.com cinepettai.com

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எல்லா காலங்களிலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

முதன் முதலாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாகதான் இவர் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்கள் இயக்கிவிட்டார் ஷங்கர். தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் சென்றுக்கொண்டுள்ளன.

ஷங்கரின் முதல் படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார். ஆனால் படத்தை எடுப்பது குறித்து ஷங்கர் அவருக்கு சரியான ரெஸ்பான்சே கொடுப்பது இல்லை என கூறப்படுகிறது.

ஏ.ஆர் ரகுமானும் பிஸியாக இருந்ததால் தற்சமயம் கீரவாணியை படத்திற்கு இசையமைக்க தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் ஷங்கர் கூறும் பதிலை வைத்துதான் படம் எடுக்க முடியுமா? இல்லையா? என்பதை அறிய முடியும்.

POPULAR POSTS

shakshi agarwal
simbu maniratnam
vijay
irfan view
sivakarthikeyan
ajith
To Top