Latest News
என் மகள் செத்தப்பையே நானும் செத்துட்டேன்.. விரக்தியில் விஜய் ஆண்டனி எழுதிய கடிதம்!..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
சமீபத்தில் ஈடு செய்ய முடியாத துயர சம்பவம் ஒன்று விஜய் ஆண்டனிக்கு நடந்தது. அவரது மகள் மீரா தற்கொலை செய்துக்கொண்டார். 12 ஆம் வகுப்பு படித்து வந்த அவர் திடீரென இப்படி தற்கொலை செய்துக்கொண்டது பொது மக்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதனையடுத்து மனமுடைந்து போனார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் தற்சமயம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது:
அன்பு நெஞ்சங்களே
என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.
அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம்,பணம், பொறாமஒ, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்”
இவ்வாறு விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.