Rajini: சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகும் அதற்கான தணிக்கை சான்றிதழ் வாங்குவது என்பது பெரிய போராட்டமாக இருக்கும் அதிலும் ரத்த காட்சிகள் அதிகமாக உள்ள படங்களில் பல காட்சிகள் நீக்கப்பட வேண்டி கூட இருக்கும்.
சில படங்கள் தணிக்கை சான்றிதழே வழங்கப்படாமல் திரையில் வெளியிடப்படாமல் போனதும் உண்டு. படத்தில் உள்ள காட்சிகளை பொறுத்து அது எந்த வயதினருக்கு தகுந்த படம் என்பதை முடிவு செய்வது தணிக்கை குழுவின் முக்கியமான வேலையாகும். இதில் ஏ என்னும் சான்றிதழ் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் என்பதை குறிக்கும் சான்றிதழாகும்.
பொதுவாக பாலியல் காட்சிகள் அதிகம் இருக்கும் திரைப்படங்களுக்குதான் ஏ சான்றிதழ் வழங்குவார்கள் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அதிக ரத்த காட்சிகள் உள்ள படங்களுக்கு கூட ஏ சான்றிதழ்தான் வழங்குவார்கள்.
ஆனால் அது பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் பொறுத்து மாறுபடும் உதாரணமாக ஜெயிலர் திரைப்படத்தில் எக்கச்சக்கமான ரத்த காட்சிகள் இருந்தது. படத்திலிருந்து தலையை வெட்டும் காட்சிகள் கூட இருந்தன இருந்தாலும் அந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படவில்லை
ஆனால் தற்சமயம் ஜெயம் ரவி நடித்து வெளியாக இருக்கும் இறைவன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இப்படி நடிகர்களுக்கு தகுந்தார் போல தணிக்கை குழு சான்றிதழ் வழங்கலாமா என நெட்டிசன்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.






