புடலங்காய்க்கு கல்லு கட்டுற மாதிரி சீன் ஏன் வச்சீங்க!.. பாக்கியராஜை நேருக்கு நேர் கேட்ட நடிகை…

திரைப்படங்களில் இளையோருக்கான ஏ ஜோக் காமெடிகளை வைத்த போதும் கூட குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் இயக்குனர் பாக்யராஜ் மட்டுமதான்.

இவர் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு ஏ ஜோக் கண்டிப்பாக இருக்கும் அதற்கு புகழ்பெற்றவர் பாக்யராஜ். இருந்தாலும் அவரது திரைப்படங்கள் குடும்ப ஆடியன்ஸ்க்குதான் மிகவும் பிடிக்கும்.

ராசுக்குட்டி என்கிற திரைப்படத்தில் அதிகமாக இந்த மாதிரி காமெடிகளை பார்க்க முடியும். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்தார். சமீபத்தில் ஒருமுறை இவர்கள் இருவரும் பேசிக் கொண்ட பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை விமர்சித்து பாக்கியராஜ் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது நடிகை ஐஸ்வர்யா, நீங்கள் மட்டும் புடலங்காய்க்கு கல்லு கட்டுவது போன்ற காட்சிகளை படத்தில் வைக்கலாமா என்று கேட்டு பாக்யராஜையே கலாய்த்து இருந்தார். ஆம் ராசுக்குட்டி திரைப்படத்தில் அப்படியான காட்சி ஒன்று வரும்.

உண்மையில் இப்போது வரும் ஏ ஜோக் காமெடி திரைப்படங்களை விமர்சிக்கும் பலரும் ஒரு காலத்தில் பாக்கியராஜ் திரைப்படங்களை ரசித்து பார்த்தவர்களே இந்த விஷயத்தை நினைவூட்டும் விதமாக ஐஸ்வர்யாவின் அந்த பேட்டி அமைந்திருந்தது.