ராஜா சார் இருக்குறதை பார்க்காமல் தப்பா பாடிட்டேன்!.. வசமாக சிக்கிய கமல்ஹாசன்..

தமிழில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி கமல் திரைத்துறையில் பல விஷயங்களில் வல்லுனராக இருந்தார்.

படங்களை இயக்குவது, திரைக்கதை எழுதுவது என பல விஷயங்களை செய்வார். அந்த வகையில் பாடல்களை பாடுவதும் அவருக்கு பிடித்த விஷயமாகும். ஆனால் மற்ற பாடகர்கள் மாதிரி கமல்ஹாசன் பாடுவதற்கு கற்றுக்கொண்டு பாடவில்லை. எனவே அவரது பாடல்களில் குறை இருக்கும்.

இந்த நிலையில் ஒருமுறை ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனை பாடுவதற்கு அழைத்திருந்தனர். ஆனால் கமலுக்கு சரியாக பாட வராது என்பதால் தமிழ் பாட்டை பாட வேண்டாம் ஆங்கில பாடலை பாடலாம் என முடிவு செய்தார். ஏனெனில் தமிழ் பாடலில் ஏதாவது தவறாக பாடினால் அதை கண்டறிந்துவிடுவார்கள்.

ஆனால் ஆங்கில பாடலில் அப்படி கண்டறிய முடியாது. இந்த நிலையில் நிகழ்ச்சியும் ஆரம்பமானது. கமல்ஹாசனும் பாடினார். பாடி முடித்தப்பிறகுதான் அவருக்கு ஒரு விஷயம் தெரிந்தது. அந்த நிகழ்ச்சிக்கு இளையராஜாவும் வந்திருந்தார். மறுநாள் கமலை பார்த்த இளையராஜா என்னய்யா நேத்து என்னமோ கத்திக்கிட்டு இருந்த என கேட்டுள்ளார். அதை வைத்தே கமல் தவறாக பாடியதை இளையராஜா கண்டறிந்துவிட்டார் என தெரிந்துள்ளது.