Connect with us

அறிவில்லாம அதை பண்றாங்க!.. கிரிகெட் ரசிகர்களை வச்சி செய்த இயக்குனர் அமீர்!..

ameer cricket

Latest News

அறிவில்லாம அதை பண்றாங்க!.. கிரிகெட் ரசிகர்களை வச்சி செய்த இயக்குனர் அமீர்!..

cinepettai.com cinepettai.com

பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இவர் பிறகு தனியாக திரைப்படம் இயக்க துவங்கினார். அமிரீன் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது,

பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். வட சென்னை திரைப்படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகும். எப்போதும் அரசியல் குறித்து அதிக நாட்டம் கொண்டவர் இயக்குனர் அமீர். சமீபத்தில் ஒரு பேட்டில் அவர் பேசும்பொழுது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஜெய் ஸ்ரீ ராம் என பாடல் ஒலித்தது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமீர் கிரிக்கெட் பார்க்க வருபவர்கள் எல்லாம் முக்கால்வாசி மேல்த்தட்டு மக்கள்தான். அப்படி படித்த மேல்தட்டு மக்கள் மனதிலேயே இப்படியான அறியாமையைதான் புகுத்தி உள்ளது அரசு. என கூறியிருந்தார் அமீர்.

மேலும் அவர் கூறும்போது கிரிக்கெட் என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு நடத்தும் விளையாட்டு. இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி அது அப்படிதான் நடக்கிறது. அது ஒரு வியாபாரம். அந்த வியாபாரத்தில் போய் உங்கள் தேசபக்தியை காட்டுகிறீர்கள் என்றால் அது அறியாமைதான் என கூறினார் அமீர்.

POPULAR POSTS

kamalhaasan
sree leela
modi sathyaraj
vengat prabhu goat
gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
To Top