அரசியல் வேணாம்னா கேக்குறீங்களா? – உதயநிதியிடம் சிக்கிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்து சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள படம் டான். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், ஷிவாங்கி, பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Social Media Bar

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

சமீபத்தில் டான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அந்த ட்ரெய்லரில் இறுதியாக அரசியல்வாதியாகனும்னா பொய் பேசனும் என்ற வசனம் வரும். அந்த வசனத்தை பார்த்ததும் உதயநிதி அருகில் இருந்த சிவகார்த்திகேயன் ஷாக் ஆனார். உடனே உதயநிதியிடம் தனக்கும் இந்த வசனத்திற்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார்.

மேலும் மேடையில் பேசும்போது இது உதயநிதி வருவார் என்பதை நினைத்து வைக்கவில்லை என்று கூறியதுடன், அந்த வசனத்தை மட்டும் ட்ரெய்லரில் நீக்கி இருக்கலாம் என சிபி சக்கரவர்த்தியையும் அன்புடன் கடிந்து கொண்டார். ஆனால் அந்த வசனத்திற்கு உதயநிதி சிரித்ததாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.