பெரிய ஹீரோக்களுக்கு கூட இப்படி நடந்ததில்ல..! – எஸ்.ஜே.சூர்யாவுக்கு கூடிய மவுசு!

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்த தற்போது நடிகராக பிரபலமாகியுள்ளவர் எஸ்.ஜே.சூர்யா.

ஆரம்பத்தில் விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வைத்து குஷி, வாலி போன்ற ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, பின்னர் தானே நடித்து நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களிலும் நடித்தார்.

பின்னர் சில காலமாக நடிப்பதிலிருந்து விலகியிருந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது வில்லன் நடிகராக பிரபலமாகியுள்ளார். அதை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இன்று எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள “கடமையை செய்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதேசமயம் இன்று எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ள “டான்” படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிறது.

ஒரே நாளில் ஒரே நடிகர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து இரண்டு படங்களின் ட்ரெய்லரும் வெளியாவது இதுவே முதல்முறை என பேசிக் கொள்ளப்படுகிறது.

Refresh