Connect with us

ரஜினியை பார்த்ததும் அடங்கிய நாய்!.. அதிர்ச்சியான படக்குழு.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!..

Cinema History

ரஜினியை பார்த்ததும் அடங்கிய நாய்!.. அதிர்ச்சியான படக்குழு.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்களாகவே கொடுத்து வரும் காரணத்தாலேயே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.  தற்சமயம் இவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினி நடித்த திரைப்படங்களில் அவருக்கு முக்கியமான திரைப்படங்கள் என ஒரு சில படங்களை கூறலாம். மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக உள்ள அருணாச்சலம், முத்து, படையப்பா, அண்ணாமலை மாதிரியான படங்கள் மத்தியில் பாட்ஷா படத்திற்கும் முக்கியமான இடமுண்டு.

ஒவ்வொரு ஆயுதப்பூஜைக்கும் தொலைக்காட்சியில் போடப்பட்டு மக்கள் அதிகம் பார்க்கும் படமாக பாட்ஷா படம் உள்ளது. அந்த படத்தில் மக்களுக்கு தட்டில் இருந்து பாட்ஷா காசு எடுத்து கொடுப்பது போன்ற காட்சிகள் இருக்கும்.

இந்த காட்சியானது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. அப்போது ரஜினிக்கு அருகில் ஒரு நாய் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்துள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. இதற்காக விசாரிக்கும்போது அங்கு கன்றுக்குட்டி அளவில் ஒரு நாய் இருப்பதை பார்த்துள்ளனர். இந்த நாயை ரஜினிக்கு பக்கத்தில் அமர வைப்பது ஆபத்து என யோசித்துள்ளனர் படக்குழுவினர்.

ஆனால் ரஜினி அந்த நாயை அழைத்து வருமாறு கூறினார். அந்த நாய் வந்த பிறகு அதற்கு முதுகில் தடவி கொடுத்தார். உடனே அது அமைதியாக ரஜினி அருகிலேயே அமர்ந்துவிட்டது. இந்த விஷயத்தை சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top