Cinema History
பாரதிராஜா எவ்வளவு முயற்சி பண்ணியும் எடுக்க முடியாமல் போன காட்சி!.. நடிகை ஆடததால் வந்த பிரச்சனை!.
Director Bharathiraja: கிராமத்து மனம் வீசும் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் எடுக்கும் முக்கியமான இயக்குனராக பாரதிராஜா இருந்து வருகிறார். முதல் படத்தை பொறுத்தவரை இயக்குனர்கள் பலரும் அதிகமாக வெற்றி பெறும் சண்டை படங்களையே எடுக்க நினைப்பார்கள்.
ஆனால் பாரதிராஜாவின் முதல் படமே 16 வயதினிலே திரைப்படமாகும். கமலுக்கு கோவணம் நடிக்க வைத்தார் பாரதிராஜா. அப்படியும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டு அதன் படியே திரைப்படங்களை எடுத்து வந்தார்.
பாரதிராஜா தனது திரைப்படங்களில் சின்ன சின்ன காட்சிகளை கூட மிகவும் கஷ்டப்பட்டு எடுக்க கூடியவர். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில்தான் அவர் நடிகை ராதிகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.
அந்த படத்தில் பூவரசம்பூ பூத்தாச்சு என்கிற பாடல் ஒன்று வரும். அந்த பாடலை படமாக்கும்போது தூது போ ரயிலே ரயிலே என்கிற வரிகள் வரும் நேரத்தில் ரயிலுக்கு பக்கத்தில் கதாநாயகி ஆடுவது போல காட்சி வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அப்போதெல்லாம் ரயில்வேயில் அனுமதி வாங்குவது கடினம் என்பதால் ரயில் போகும் ஒரு பாதையில் கேமிராக்களை செட் செய்து அப்படியே ராதிகாவை ஆட வைத்து படமாக்க முடிவு செய்தனர். அதற்கான படப்பிடிப்பு வேலைகளும் தயாராகின.
ஆனால் படப்பிடிப்பு நடத்தும்போது ரயில் அதிக சத்தத்தோடு வந்ததால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. முக்கியமாக ராதிகாவால் அந்த ரயில் சத்தத்தில் ஆட முடியவில்லை. அதற்கு பிறகுதான் ரயிலுக்கு இவ்வளவு அருகில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பது பாரதிராஜாவிற்கு தெரிந்துள்ளது,
இதனையடுத்து தூரத்தில் ரயில் செல்வது போல அந்த காட்சியை இயக்கினார் பாரதிராஜா.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்