Cinema History
என் அம்மாவுக்காக எழுதுன பாட்டு… ஆனா காதல் பாட்டா வச்சுட்டாங்க… செண்டிமெண்டாக வாலி எழுதிய பாடல்!..
தமிழில் உள்ள பாடல் ஆசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்த வெற்றிடத்தை வாலிதான் நிரப்பினார். சிவாஜி காலகட்டங்களில் தொடங்கி விஜய் அஜித் கால கட்டங்கள் வரை சினிமாவிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படத்திற்கு கூட பாடல் வரிகளை வாலிதான் எழுதினார். அந்த அளவிற்கு காலத்திற்கு ஏற்றார் போல பாடல் வரிகளையும் மாற்றி தொடர்ந்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் வாலி.
ஒரு பேட்டியில் அவர் கூறும்பொழுது தனது தாயின் இழப்பு பற்றி கூறியிருந்தார். அவரது தாயின் இறப்பு அவருக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் குறைவான வாய்ப்புகளே அவருக்கு தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் அவர்கள் தாய் இறந்து ஒரு வருடம் கழித்து இதயத்தில் நீ என்கிற திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை பெற்றார் வாலி. ஆனால் அப்பொழுதும் தனது தாயின் நினைவு நீங்காமலே இருந்திருக்கிறார். அப்போது காதலியை பிரிந்ததற்காக பாட்டு பாடுவது போல ஒரு சூழல் இருந்தது.
அதற்கான பாடல் வரிகளை எழுதும்போது உறவு என்றொரு சொல்லிருந்தால் என்கிற பாடலை வாலி எழுதினார். அது காதலர்கள் பிரிவுக்காக எழுதிய பாடல் என்றாலும் தனது தாயை நினைவில் கொண்டு தான் அந்த பாடலை எழுதியதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் வாலி.
