அபர்ணா முரளியிடம் தவறாக நடந்துக்கொண்ட மாணவர்!  – கடுப்பான ரசிகர்கள்!

தென்னிந்திய நட்சத்திரங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட கதாநாயகிகளில் அபர்ணா பாலமுரளி முக்கியமானவர். சூரரை போற்று திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் வெகுவாக மக்களை கவர்ந்ததை அடுத்து இவருக்கு அதிகமான அளவில் ரசிக வட்டாரங்கள் உருவாகிவிட்டன.

Social Media Bar

தமிழில் முதன் முதலில் எட்டு தோட்டாக்கள் படத்தில் இவர் நடித்தார். அதன் பிறகு சூரரை போற்று திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் அபர்ணா. இறுதியாக வீட்ல விஷேசம் திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி ஒன்றின் விழாவில் சென்றுள்ளார் அபர்ணா. அப்போது அங்கே இருந்த மாணவர் அபர்ணாவிடம் அநாகரிகமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேடையில் அமர்ந்திருந்த அபர்ணாவை கையை பிடித்து அழைத்து அவரது தோளில் கை போட்டுள்ளார் இந்த மாணவர்.

உடனே அபர்ணா அதை தடுத்துவிட்டு சகஜமாக நகர்ந்துவிட்டார். ஆனால் தற்சமயம் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகவும் அபர்ணாவின் ரசிகர்கள் கோபமாகிவிட்டனர். இந்த நிலையில் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் அந்த மாணவருக்கு எதிராக கருத்துக்கள் நிலவி வருகின்றன.

திரை பிரபலமும் , பெண்ணியவாதியும் ஆன சின்மயி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்