Connect with us

தமன்னாவுமா! ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் பிரபலங்கள்!

News

தமன்னாவுமா! ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் பிரபலங்கள்!

Social Media Bar

ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் ஒரு மாஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விவரங்களை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

அதன்படி மலையாள நடிகரான மோகன்லால் இதில் நடிக்கிறார். இந்த விஷயம் ஏற்கனவே ஒரு செய்தியாக கசிந்திருந்தது. தற்சமயம் அதிகாரபூர்வமாகவே மோகன்லால் நடிப்பது தெரிந்துள்ளது.

தெலுங்கில் முக்கிய நடிகரான சுனில் இந்த படத்தில் நடித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது ஜெயிலர் பேன் இந்தியா படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த படத்தில் தமன்னாவும் நடிக்கிறார் என்னும் தகவலும் வந்துள்ளது.

கண்டிப்பாக தமன்னா கதாநாயகியாக இருக்க வாய்ப்பில்லை என ஒரு குழு கூறி வருகிறது. எனவே படத்தில் ரஜினியின் தங்கையாக தமன்னா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை முழு ஆக்‌ஷன் படமாக இருக்கும் பட்சத்தில் தமன்னா வேறு ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்புள்ளது.

Bigg Boss Update

To Top