News
நீ பண்றதே ஏமாத்து வேலை.. இதுல எல்லாரையும் பேசுறீயா.. சிக்கிய ஏ2டி யூ ட்யூப் சேனல்..!
எப்படி சினிமா பிரபலங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுகிறார்களோ அதே போல யூடியூப் பிரபலங்களும் தற்சமயம் வரவேற்பை பெற துவங்கியிருக்கின்றனர்.
அப்படியாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் ஒரு சில யூடியூப் சேனல்களில் ஏ2டி என்கிற யூட்யூப் சேனல் மிக பிரபலமானதாகும். பொதுவாக மக்களை என்டர்டைன்மென்ட் செய்யும் யூடியூப் சேனல்கள் தான் மிகப் பிரபலமாக இருக்கும்.
அவற்றிற்கு நடுவே கேளிக்கைகளுக்கு நடுவே தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் ஒரு யூ ட்யூப் சேனலாக ஏ 2டி இருந்து வருகிறது. இந்த நிலையில் நந்தா என்கிற ஒரு நபர்தான் இந்த சேனலை நடத்தி வருகிறார்.
சேனல் செய்த மோசடி:
தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடக்கும் மோசடி குறித்து இவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவற்றிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து இணையத்தில் நடக்கும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை இவரும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.
இதற்கு நடுவே தற்சமயம் இவரை குறித்து ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கணினிகளை அசெம்பிள் செய்து தயாரித்து வழங்கும் நிறுவனம் ஒன்றை வைத்து இருக்கிறார்.
அதே சமயம் எல்லா வீடியோக்களிலும் அவர் கணினிகளுக்கான ஓஎஸ் களை விற்கும் ஒரு தளத்தை தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார். இதுவும் அவருடைய சொந்த நிறுவனம் என்று தற்சமயம் தெரிந்திருக்கிறது.
மேலும் இந்த வெப்சைட்டில் விற்கப்படும் சாப்ட்வேர் மற்றும் ஓஎஸ் களுக்கான கீ அனைத்துமே மோசடி முறையில் விற்கப்படுபவைதான் அவை அவையாவும் நிஜமானது கிடையாது என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே ஏ2டி நந்தாவே இவ்வளவு நாள் மோசடிதான் செய்திருக்கிறார் என கூறப்படுகிறது இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுக்குறித்து நந்தா என்ன விளக்கம் தர போகிறார் என்பதுதான் இப்போது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
