TV Shows
கூட இருந்தே முதுகுல குத்திட்டாங்க.. மனைவி குறித்து பேசிய அர்னவ், அன்ஷித்தா.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் ஆர்னவ். ஆர்னவ் விஜய் டிவியில் நிறைய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர்.
அதே மாதிரியே விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் செய்திகளில் நடித்து அதன் மூலமாக பிரபலம் அடைந்தவர் நடிகை அன்சிதா.
அன்சிதாவும் அர்ணவும் காதலித்து வருவதாக ஒரு பேச்சு இருந்து வந்தது இந்த நிலையில் பிக் பாஸ் வந்த இரண்டாவது வாரத்திலேயே ஆர்னவ் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரது மனைவிக்கு அவர் செய்த துரோகம் தான் அதற்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. அர்னவின் மனைவி இது குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருந்தார். அவர் கூறும் பொழுது அன்சிதாவும் அர்ணவும் காதலித்து கொண்டு என்னை மிகவும் கொடுமைப்படுத்தினர் என்று அவர் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து அர்ணவிற்கு ஓட்டுகள் குறைந்தது அதனால் அவர் பிக் பாஸில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆர்ணவும் அன்சிதாவும் பேசியிருந்தனர். அதில் ஆர்னவ் கூறும் பொழுது நான் நம்பிய பலரும் என்னை முதுகில் குத்திய போதும்கூட எனக்கு எப்பொழுதுமே ஆதரவாக இருந்தது அன்சிதா என்று கூறியிருந்தார்.
மேலும் அன்சிதாவிடம் நீங்களும் அர்னவும் காதலிக்கிறீர்களா என்று கேட்ட பொழுது இப்பொழுது காதலிக்கவில்லை ஆனால் எதிர்காலத்தில் காதலிக்கலாம் என்று பதில் அளித்து இருந்தார். இதன் மூலமாக அவரது மனைவி சொன்னது உண்மைதான் போல என்று ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர்.
