Connect with us

அயலில தாலி அறுக்குற சீன் ரொம்ப கெத்தா இருந்தது – ஓப்பன் டாக் கொடுத்த அபி நக்‌ஷத்ரா

News

அயலில தாலி அறுக்குற சீன் ரொம்ப கெத்தா இருந்தது – ஓப்பன் டாக் கொடுத்த அபி நக்‌ஷத்ரா

Social Media Bar

தற்சமயம் ஓ.டி.டியில் வெளிவந்து தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் தொடர் அயலி. 1990 களில் ஒரு கிராமத்தில் நடக்கும் பெண் அடிமைத்தனத்தை அடித்தளமாக கொண்டு இந்த சீரிஸ் நகர்கிறது.

வயதுக்கு வந்த உடன் பெண்களுக்கு படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துவைக்கும் நடைமுறையானது 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்தது. இப்போதும் கூட இந்தியாவில் ஏதோ ஒரு கிராமத்தில் இந்த மாதிரியான பிற்போக்கு தனங்கள் நடந்துக்கொண்டிருக்கலாம்.

அயலி தொடரில் தமிழ் செல்வி என்னும் முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் நடிகை அபி நக்‌ஷத்ரா. இந்த சீரிஸ் வெளியான பிறகு சினிமா துறையில் அபி நக்‌ஷத்ராவிற்கு அதிக வரவேற்புகள் வர துவங்கின.

ஒரு பேட்டியில் அயலி சீரிஸில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அந்த சமயத்தில் சீரிஸில் வரும் முக்கிய காட்சியை பற்றி கேட்டனர். ஒரு காட்சியில் தமிழ் செல்வியின் கழுத்தில் தாலியை கட்டிவிடுவான் வில்லன். பொதுவாக காலம் காலமாக நமது தமிழ் சினிமாவில் ஒருமுறை தாலி கட்டிவிட்டால் அவன்தான் கணவன் எனதான் காட்சிகள் இருக்கும்.

ஆனால் இந்த தொடரில் தாலியை அறுத்து மூஞ்சில் எறிந்துவிடுவார் தமிழ் செல்வி. அந்த காட்சியில் நடிக்கும்போது எப்படி இருந்தது என அபி நக்‌ஷத்ராவிடம் கேட்டனர். அதற்கு அவர் ரொம்ப கெத்தா இருந்தது. இவ்வளவு நாள் இதை பெரிய விஷயமா எல்லோரும் பார்த்துட்டு இருக்கும்போது அது ஒரு விஷயமே கிடையாது என காட்டிய காட்சி எனக்கே மிகவும் பிடித்திருந்தது. என அபி நக்சத்ரா கூறுகிறார்.

To Top