கமல் முன் மேடையிலேயே கண் கலங்கிய அபிராமி.. இதுதான் காரணம்.!
தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் மிக குறைவான அளவிலேயே இருக்கின்றனர். அப்படியான நடிகைகளில் நடிகை அபிராமி முக்கியமானவர்.
அபிராமி நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு அடையாளமாக அமைந்த திரைப்படம் விருமாண்டி திரைப்படம்தான். விருமாண்டி திரைப்படத்தில் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை அபிராமி வெளிப்படுத்தி இருப்பார்.

கமல்ஹாசனே வியந்து நிறைய மேடையில் அபிராமியின் நடிப்பை பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் அபிராமி தற்சமயம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இது குறித்து அவர் மேடையில் பேசிய போது குணா திரைப்படத்தில் அபிராமி என்கிற பெயரை பார்த்தபொழுது தான் குட்டி திவ்யா என்கிற எனது பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டேன்.
அந்தப் பெயருக்கு ஒரு மதிப்பு கிடைத்தது கமல் சாரால் தான் என்று மேடையிலேயே கண்ணீர் விட்டு அழ துவங்கி இருக்கிறார் அபிராமி.