Connect with us

அஜித்தை ரெண்டு தடவை பார்த்தேன்.. உதாசீனப்படுத்தி அனுப்பிட்டார்!.. மனம் கலங்கும் காமெடி நடிகர்!..

bava lakshmanan ajith

Cinema History

அஜித்தை ரெண்டு தடவை பார்த்தேன்.. உதாசீனப்படுத்தி அனுப்பிட்டார்!.. மனம் கலங்கும் காமெடி நடிகர்!..

அஜித்தை ரெண்டு தடவை பார்த்தேன்.. உதாசீனப்படுத்தி அனுப்பிட்டார்!.. மனம் கலங்கும் காமெடி நடிகர்!..

Social Media Bar

தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். இறுதியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அஜித். ஆனால் உலக சுற்றுலா போக வேண்டும் என்கிற அவரின் ஆசை காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தள்ளிப் போட்டார்.

தற்சமயம் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. பொதுவாகவே அஜித் அனைவருக்கும் நல்லது செய்யக்கூடியவர் பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உண்டு. ஆனால் அவரை தேடி சென்ற ஒரு நடிகருக்கு அவர் உதவவில்லை என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

பல படங்களில் காமெடி கதாபாத்திரமாக நடித்த நடிகர் பவா லெட்சுமனன்தான் இந்த உரையை முன் வைத்திருப்பவர். இரண்டு முறை அஜித்தை அவரது வீட்டிலேயே சென்று பார்க்க முயற்சித்த பொழுதும் அவரை வீட்டுக்குள்ளே விடவில்லை என்றும் அவருக்கு எந்த உதவியும் அஜித் செய்யவில்லை என்றும் அஜித் மீது குற்றம் சாட்டியுள்ளார் பவா லட்சுமணன்.

 யூடியூபில் அந்த பேட்டிக்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள் கூறும் பொழுது முதலில் எந்த ஒரு நபரிடமும் உதவி கேட்டு அழைவது நாகரிகம் அற்ற செயலாகும். அஜித் எதற்கு உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நடிகர்கள் என்றால் உதவி செய்ய வேண்டும் என கட்டாயம் உண்டா? என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

To Top