Cinema History
நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி பத்தி காமிச்சது உண்மை கிடையாது!.. மனம் திறந்த பிரபல நடிகர்!.
Keerthy Suresh in Nadigaiyar Thilagam : தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகராக இருந்தாலும் சரி நடிகையாக இருந்தாலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மிக எளிதாகவே கிடைத்துவிடும்.
பொதுவாக தெலுங்கு போன்ற மற்ற மொழி சினிமாக்களில் நடிகைகளின் நடிப்பிற்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதே கிடையாது கவர்ச்சிக்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் நடிக்க தெரியாத நடிகைகள் கூட அங்கு பிரபலமாக முடிகிறது.
ஆனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நடிகைகள் கூட இங்கு நடிக்க வேண்டி இருக்கிறது அந்த விஷயத்தில் நடிகையர் திலகம் என்கிற ஒரு திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் அனைவரது மனதிலும் வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த திரைப்படம் நடிகை சாவித்திரியின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இது குறித்து பிரபல நடிகரான பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லெட்சுமணன் கூறும்பொழுது இந்த திரைப்படத்தில் ஜெமினிகணேசன் குறித்து வரும் கதாபாத்திரம் சரியாக உருவாக்கப்படவில்லை எனக் கூறுகிறார்.
ஜெமினி கணேசன் ஆக அந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரத்தை ஒரு வில்லன் கதாபாத்திரம் போல உருவாக்கியிருந்தனர். ஆனால் உண்மையில் ஜெமினி கணேசன் அவ்வளவு மோசமான ஒரு கதாபாத்திரமாக இருக்கவில்லை படத்தின் ஓட்டம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்து விட்டனர் என கூறுகிறார் சித்ரா லெட்சுமணன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்