Tamil Cinema News
ரஜினி படத்தால் கௌதம் மேனனுக்கு வந்த சிக்கல்.. உள்ளே புகுந்து காப்பாற்றிய டேனியல் பாலாஜி.!
காதல் திரைப்படங்களிலேயே அதிக ஆக்ஷன் வைத்து அதை க்ரைம் படமாக மாற்றும் சூட்சிமம் அறிந்தவர்தான் இயக்குனர் கௌதம் மேனன். வாரணம் ஆயிரம், நீதானே என் பொன் வசந்தம் மாதிரியான காதல் கதைகளை இயக்கிய அதே கௌதம் மேனன் தான், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
கௌதம் மேனனின் திரைப்படங்கள் என்பவை மற்ற இயக்குனர்கள் திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் தனித்துவமாக தெரிய கூடியவை. அனாலும் வெகு வருடங்களாகவே அவர் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகாமல் இருந்து வருகிறது.
அந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். அந்த படம் திரையரங்கிற்கு வந்தால் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது கௌதம் மேனனின் எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த படம் குறித்த முக்கிய விஷயம் ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் ஒரு சில முக்கிய காட்சிகளை 2023 ஆம் ஆண்டு படமாக்கினோம். அதில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்கனவே நடிகர் விநாயகனிடம் கேட்டிருந்தோம். ஆனால் அவர் அந்த சமயத்தில்தான் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
அதனால் எங்களுக்கு கால் ஷீட் கொடுக்க முடியாது என கூறினார். நான் பிறகு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களிடம் கேட்டேன். பலரும் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில்தான் எனக்கு டேனியல் பாலாஜியின் நினைவு வந்தது.
டேனியல் பாலாஜிக்கும் எனக்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. எனவே அவருக்கு போன் செய்து விஷயத்தை கூறினேன். படத்தின் கதை என்னவென்று கூட அவர் கேட்கவில்லை. எப்ப வரணும் என்றுதான் கேட்டார். மறுநாள் படப்பிடிப்புக்கு வந்து நின்றார். என டேனியல் பாலாஜி குறித்து கூறியுள்ளார் கௌதம் மேனன்.
