Connect with us

காரை தொட்டதுக்காக என்னை அடிச்சிட்டாங்க!.. கண்ணீர் விட்ட மயில்சாமிக்காக அவர் மனைவி செய்த காரியம்!.

mayilsamy2

Tamil Cinema News

காரை தொட்டதுக்காக என்னை அடிச்சிட்டாங்க!.. கண்ணீர் விட்ட மயில்சாமிக்காக அவர் மனைவி செய்த காரியம்!.

Social Media Bar

Mayilsamy : தமிழ் சினிமாவில் பல காலமாக இருந்தவரும் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருபவர் நடிகர் மயில்சாமி. மயில்சாமி தனது இளமை காலங்களிலேயே தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்துவிட்டார்.

அவருக்கென்று பெரிதாக கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமா வரை வாழவைத்துக் கொண்டுதான் இருந்தது. அவரது இளமை காலங்களில் துவங்கி அவரது முதுமை காலம் வரையிலும் சினிமாவில் அவருக்கான வாய்ப்பு என்பது இருந்து கொண்டுதான் இருந்தது.

முக்கியமாக நடிகர் விவேக் நடிக்கும் காட்சிகளில் நடித்திருக்கிறார் மயில்சாமி. ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் சின்ன சின்ன வேலைகளில்தான் மயில்சாமி பார்த்து வந்தார். அவருக்கு பென்ஸ் கார் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த காரை என்றாவது ஒரு நாள் வாங்கி விடமாட்டோமா என்கிற ஏக்கம் மயில்சாமிக்கு எப்போதும் உண்டு.

ஆனால் அந்த காரை நினைத்து கூட பார்க்க முடியாத அளவு குறைந்த வருமானத்தில் அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்தார் அப்பொழுது ஒருமுறை எங்கேயோ நின்ற ஒரு பென்ஸ் காரை கையால் தொட்டு பார்த்தார் மயில்சாமி. அவருக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த காரின் உரிமையாளர் இதை பார்த்தவுடன் மயில்சாமியை அழைத்து அவரை அடித்து அனுப்பினார். அதற்குப் பிறகு மயில்சாமி இந்த நிகழ்வை தனது மனைவியிடம் கூறி கண்ணீர் விட்டு உள்ளார். அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து மயில்சாமி கொஞ்சம் நன்றாக சம்பாதிக்க துவங்கிய பொழுது மயில்சாமிக்கு பரிசாக ஒரு பென்ஸ் காரை அவரது மனைவியின் குடும்பத்தார் வாங்கி கொடுத்தார்கள். அதை என்றென்றும் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று ஒரு முறை அவர் ஆர்.ஜே பாலாஜி இடம் கூறியுள்ளார் மயில்சாமி.

To Top