Cinema History
இவ்வளவு பாட்டு பாடின பாரதியார் ஏன் அந்த பாட்டை பாடலை!.. யாருக்குமே தெரியலை!.. கண்டுப்பிடிச்ச நாகேஷ்!..
Tamil Actor Nagesh: தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தன. ஏனெனில் இப்போது போல் இல்லாமல் அப்பொழுது நடிகர் நாகேஷ் தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், சந்திரபாபு இப்படி ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தனர்.
இவர்கள் அனைவருமே சிறப்பாக காமெடி செய்யக்கூடிய நடிகர்களாக இருந்ததால் நாகேஷிற்கு பெரும் போட்டி இருந்தது என்று கூறலாம். அப்படியும் கூட தனக்கென தனி உடல் மொழியை கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இடத்தை பிடித்தவர் நடிகர் நாகேஷ்தான். காமெடி நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறப்பான குணச்சித்திர நடிகர் என்று கூறலாம்.
எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர் நாகேஷ். ஆனால் இயல்பிலேயே அவரிடம் காமெடி இருப்பதால் அந்த கதாபாத்திரங்களிலும் கூட ஒரு காமெடி தனம் இருப்பதை பார்க்க முடியும். பெரும் நடிகர்கள் படத்தில் தொடர்ந்து நடித்து வந்த நாகேஷ் இலக்கியத்திலும் அதிக மரியாதை கொண்டிருந்தார்.
முக்கியமாக பாரதியாரின் கவிதைகள் மீது நாகேஷ்க்கு ஈர்ப்பு உண்டு இந்த நிலையில் பாரதியார் குறித்த விழா ஒன்றில் பேசுவதற்காக நாகேஷை அழைத்த பொழுது இதுவரை பாரதியாரை பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்களை கூட நாகேஷ் பேசினார்.
அந்த அளவிற்கு அந்த கவிதைகள் மீது ஆர்வம் கொண்டிருந்தார் ”பாரதியார் எவ்வளவோ பாடல்களை எழுதியிருந்தாலும் அவர் எழுதாத பாடல் ஒன்று உண்டு அதுதான் தாலாட்டு பாட்டு. குழந்தைகளுக்கான தாலாட்டு பாட்டை பாரதியார் எழுதியதே கிடையாது.
அது ஏன் என்று நான் யோசித்த பொழுது எனக்கு என்ன தோன்றியது என்றால் ஏற்கனவே மக்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் விடுதலைக்காக போராடாமல் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை மேலும் தூங்க வைக்க வேண்டுமா என்று தான் பாரதியார் தாலாட்டு பாட்டை எழுதவில்லை என்று நினைக்கிறேன்” என்று நாகேஷ் கூறிய பொழுது கவிஞர்கள் பலருமே வியந்து போனார்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்