Cinema History
பாதி படத்துக்கு பிறகு பிடிக்கலைனா விலகிடு!.. ரஜினிகாந்திடம் டீலிங் போட்டு படம் செய்த இயக்குனர்!.. ரஜினி வாழ்க்கையையே மாற்றிய படம்!,
Rajinikanth : தமிழ் திரை பிரபலங்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒவ்வொரு திரைப்படமும் முக்கியம் என்று கூறலாம். அவர்கள் தவறவிடும் ஒரு திரைப்படம் அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம்.
உதாரணத்திற்கு நடிகர் அப்பாஸ் தவறவிட்ட ஜீன்ஸ் திரைப்படம் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கலாம். அதேபோல நடிகர் ரஜினியும் ஒரு திரைப்படத்தை தவற விட இருந்து கடைசியில் இயக்குனர் அவரை காப்பாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது.
இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் நிறைய திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அதில் நிஜ கதையை அடிப்படையாகக் கொண்டு முத்துராமன் இயக்கிய திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது கதையை சார்ந்து ரஜினிகாந்துக்கு சில நெருடல்கள் உருவாக தொடங்கி இருக்கின்றன.
Rajinikanth Wrong Decision:
அந்த நிலையில் அவர் இயக்குனரை அழைத்து எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அந்த உறவினர்கள் அவனுக்கு துரோகம் செய்வதாகவே கதை இருக்கிறதே, அது எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
அப்பொழுது அவரிடம் பேசிய இயக்குனர் கூறும் பொழுது ஐயாயிரம் ரீல்களை முதலில் எடுத்து விடுவோம். அதன் பிறகு அவற்றை நீங்கள் பாருங்கள் பார்த்துவிட்டு உங்களுக்கு அப்பொழுதும் படம் பிடிக்கவில்லை என்றால் இந்த படத்தை நிறுத்தி விடலாம் என்று கூறி இருக்கிறார்.
அதேபோல 5000 ரீல்கள் எடுக்கப்பட்ட பிறகு அதை பார்த்த ரஜினிகாந்த் ஆச்சரியப்பட்டு போய்விட்டார். எனது சினிமா வாழ்க்கையிலேயே இது முக்கியமான திரைப்படமாக இருக்கும். நல்ல திரைப்படத்தை தவறவிட இருந்தேன் என்று கூறி இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அதேபோல இப்பொழுது வரை ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படங்களில் ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்திற்கு முக்கியமான இடம் இருக்கும்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்