Connect with us

பா.ரஞ்சித் மட்டும் இல்ல நிறைய பேர் சாதி படம்தான் எடுக்கிறாங்க!.. கேரளாவில் தமிழ் சினிமாவை வச்சி செய்த சமுத்திரக்கனி!.

samuthrakani pa ranjith

News

பா.ரஞ்சித் மட்டும் இல்ல நிறைய பேர் சாதி படம்தான் எடுக்கிறாங்க!.. கேரளாவில் தமிழ் சினிமாவை வச்சி செய்த சமுத்திரக்கனி!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் சாதிய இயக்குனர்கள் என சில இயக்குனர்களை மக்கள் அழைப்பதுண்டு. ஆனால் சமுத்திரக்கனி வெளியிட்டிருக்கும் விஷயங்களை வைத்து பார்க்கும்போது தமிழ் சினிமா முழுக்க சாதிதான் இருக்கிறது என தெரிகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்சமயம் நடிகராக நடித்து வருபவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவர் கேரளாவில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டப்போது அவரிடம் பா.ரஞ்சித் தலித் மக்களை மட்டும் பெரிதாக காட்சிப்படுத்துகிறாரா என கேட்கப்பட்டது.

samuthrakani
samuthrakani

அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பான்மையான இயக்குனர்காள் தங்களது சாதியை சேர்ந்த நபர்களை வளர்த்துவிடுகின்றனர். தங்கள் சாதியை பெருமைப்படுத்தி திரைப்படம் எடுக்கின்றனர்.

சாதிய படங்கள் இயக்கும் இயக்குனர்கள்:

அதுல என்ன மாதிரி இருக்கும் சில இயக்குனர்கள்தான் அனைவரும் ஒன்னு என படம் எடுக்கிறார்களே தவிர மற்றவர்கள் எல்லாருமே அவர்கள் சாதியை பெருமைப்படுத்திதான் படம் எடுக்கின்றனர். இன்னும் சொல்ல போனால் ஒரு இயக்குனர் எந்த சாதியை சேர்ந்தவராக இருக்கிறாரோ அதே சாதியை சார்ந்த கேமிரா மேனைதான் படத்தில் வைக்கின்றனர்.

அதே சாதியை சேர்ந்த நடிகருக்குதான் வாய்ப்பு தருகின்றனர். ஏதோ முடியாத பட்சத்திற்குதான் வேறு ஆட்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். இது தமிழ் தெலுங்கு இரண்டு சினிமாவிலும் நடக்கிறது. ஆனால் மலையாளத்தில் அதை நான் பார்க்கவில்லை என கூறுகிறார் சமுத்திரக்கனி.

To Top