500 கோடி சொத்துக்களை விற்ற நடிகர் சத்யன்.. இதுதான் காரணம்..!

மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள காமெடியன்களில் முக்கியமானவர் நடிகர் சத்யன். அவர் நடித்த நண்பன், வேட்டைக்காரன் மாதிரியான திரைப்படங்களில் வரும் காமெடி காட்சிகள் எல்லாமே அதிக பிரபலமானவை.

தமிழில் 50க்கும் அதிகமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சத்யன். உண்மையில் சத்யன் மிகவும் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மாதம்பட்டியில் உள்ள மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சத்யன்.

இவருக்கு அங்கு 500 ஏக்கர் நிலம், வீடு என சொத்துக்கள் மட்டுமே 500 கோடிக்கு உள்ளது. மாதம்பட்டியின் சின்ன ஜமீன் என்றுதான் இவரை அழைப்பார்களாம். அந்த அளவிற்கு செல்வாக்கான நபராக சத்யன் இருந்துள்ளார். இவரது தந்தையான மாதம்பட்டி சிவக்குமாருக்கு தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிக்க ஆசை இருந்தது.

அதனை தொடர்ந்து தனது மகன் சத்யனை கதாநாயகனாக வைத்து இளையவன் மற்றும் கண்ணா உன்னை தேடுகிறேன் ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்தார். ஆனால் அந்த இரண்டு திரைப்படங்களுமே தோல்வியை தழுவியது.

அதனை தொடர்ந்து நடிகர் சத்யன் காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். அதிலுமே கூட அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்சமயம் அவரது ஊரில் உள்ள சொத்துக்கள் முழுவதையும் சத்யன் விற்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மொத்தமாக சென்னையிலேயே செட்டில் ஆகிவிடலாம் என அவர் முடிவு செய்ததால் அந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் சத்யனின் உறவினர்களுக்கு இது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version