Cinema History
கதாநாயகனா நடிக்க தொடங்குன பிறகுதான் என் நிம்மதியே போச்சு!.. ஓப்பன் டாக் கொடுத்த சத்யராஜ்!..
Sathyaraj: சரத்குமார் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பெரும் கொடிக்கட்டி பறந்த பொழுது அவர்களுக்கு போட்டியாக களமிறங்கிய மற்றொரு நடிகர்தான் சத்யராஜ்.
தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகர் 20க்கும் அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்த பிறகும் கதாநாயகனாக வாய்ப்பை பெற்று ஹீரோவாக மாறினார் என்றால் அது நடிகர் சத்யராஜ்தான். ஆனால் ஹீரோவாக நடிப்பதை விடவும் வில்லனாகத்தான் சத்யராஜை பார்த்து பலரும் பயந்தனர்.

அதன் பிறகு காமெடியில் பெரிதாக கலக்கியிருக்கிறார் சத்யராஜ். இப்போதும் கூட சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் சத்யராஜின் காமெடிகள் தனித்துவமாக தெரிவதை பார்க்க முடியும். இப்படி பன்முக திறமை கொண்ட சத்யராஜ் எப்படி தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆனார் என்பதை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தூக்கத்தை இழந்த சத்யராஜ்:
ஆரம்பத்தில் வில்லனாக நடித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எந்த பொறுப்பும் எனக்கு இருக்கவில்லை ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பேன். ஏதாவது மொக்கை திரைப்படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்றாலும் கூட அந்த படத்தை திட்டிக்கொண்டே அதில் நடிப்பேன்.

ஏனெனில் அந்த படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அது வில்லனாக நடிக்கும் எனக்கு பிரச்சனையாக இருக்காது. ஆனால் கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு அந்த நிம்மதி எனக்கு இருக்கவில்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி அடைய வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு இருந்தது.
அதன் பிறகு இரவுகளில் தூக்கம் கூட வராது அந்த திரைப்படங்களின் கதை எப்படி இருக்கும் என்றுதான் யோசனைகள் இருக்கும். எனவே கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகுதான் எனக்கு நிம்மதி என்பதே இல்லாமல் போனது. ஆனால் அதுதான் என்னை சினிமாவில் பெரிதாக வாழ வைத்தது என்று கூறுகிறார் சத்யராஜ்.
