தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. பொதுவாகவே சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அதிலும் தற்சமயம் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் கம் பேக் என்பது தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தரும் விஷயமாக அமைந்திருக்கிறது. ஆமாம் மாநாடு திரைப்படம் சிம்புவின் நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளியான பத்துதல திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. முன்பெல்லாம் சிம்பு திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது.

சரவணா திரைப்படத்தை எடுக்கும் பொழுது சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரவில்லை என்று கே எஸ் ரவிக்குமாரே ஒரு முறை அவரது நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். அதே சமயம் தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசு தொடர்பாக அதிக சர்ச்சைக்கு உள்ளான நடிகரும் நடிகர் சிம்புதான்.
இவரும் முதலில் நயன்தாராவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு நயன்தாராவுக்கும் இவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ஹன்சிகாவை காதலிக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சு இருந்து வந்தது.
ஆனால் இப்போது வரை 40 வயதுக்கு மேலாகியும் சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருந்து வருகிறார். இதற்கு நடுவே சிம்பு அடுத்ததாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
தெலுங்கு நடிகர் ஒருவரின் மகளைதான் சிம்பு திருமணம் செய்யவிருக்கிறார் அந்த பெண் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.