Connect with us

விஜய் ஆண்டனி உடல் நிலை தற்போதைய நிலை என்ன? – ஜெர்மனி மருத்துவமனைக்கு செல்வது ஏன்?

News

விஜய் ஆண்டனி உடல் நிலை தற்போதைய நிலை என்ன? – ஜெர்மனி மருத்துவமனைக்கு செல்வது ஏன்?

Social Media Bar

நடிகர் விஜய் ஆண்டனி தமிழில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்டிருக்காவிட்டாலும் கூட அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகனாக இருந்து வருகிறார்.

பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டன. இறுதியாக ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்தது.

எனவே அதை படமாக்குவதற்கான படப்பிடிப்புகள் நடந்துக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளானார். சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் அவர் உடல் தேறி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் விஜய் ஆண்டனியின் முகத்தில் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாம். எனவே முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம். எனவே ஜெர்மனியில் இருக்கும் மருத்துவமனைக்கு இதற்காக விஜய் ஆண்டனி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

To Top