Cinema History
30 வருஷ கனவை நிறைவேற்றிய விஜய்!.. சினிமாவிற்கு வந்தப்போதே அந்த ஆசை இருந்துச்சாம்…
தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் விஜய்தான் இருந்து வருகிறார். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய், இதுவரைக்கும் அவர் நடித்த ஆறு முதல் ஏழு திரைப்படங்கள் முதல் நாளே 100 கோடி வசூலை கொடுத்துள்ளன.
இந்த நிலையில் தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முன்பு ஒரு பேட்டியில் விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அப்பொழுது விஜய் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலக்கட்டமாகும்.
அப்போது விஜய்யிடம் தமிழில் நம்பர் ஒன் நடிகராக ஆக வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? என்று கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த விஜய் எந்த ஒரு துறையிலும் புதிதாக வரும் நபருக்கு அந்த துறையில் சாதனை படைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.
முக்கியமாக அந்தத் துறையில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும் இரண்டாவது இடமோ மூன்றாவது இடமோ பிடிப்போம் என்று எந்த ஒரு நபரும் ஆசைப்படுவதில்லை. எனவே எனக்கும் தமிழ் சினிமாவில் முதல் இடத்தை நான்தான் பிடிக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு என்று கூறியிருந்தார்.
இது விஜய் சினிமாவிற்குள் நுழைந்தபோதே வந்த ஆசையாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இவ்வளவு வருட உழைப்பிற்குப் பிறகு ஓரளவு அந்த அங்கீகாரத்தை பெற்றுருக்கிறார் விஜய் அவரது 30 ஆண்டு கால கனவு இதன் மூலமாக நிறைவேற இருப்பதாக கூறப்படுகிறது.
